நிரவ் மோடியின் ஜாமீன் மனு - லண்டன் கோர்ட் மீண்டும் நிராகரிப்பு

நிரவ் மோடி சார்பில் மீண்டும் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட் நிராகரித்துள்ளது.
நிரவ் மோடி
நிரவ் மோடி
Published on

லண்டன்:

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையே, நிரவ் மோடி சார்பில் மீண்டும் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் கடுமையான பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருப்பதாக அந்த ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த மனு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்காக நீதிமன்றத்தில் நீரவ் மோடி இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இருமடங்கு பிணைத்தொகை அளிக்க தயாராக இருப்பதாக நீரவ் மோடி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனாலும், அவரது ஜாமீன் மனுவை லண்டன் கோர்ட் நிராகரித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com