தலைமறைவு குற்றவாளி மெகுல் சோக்சியின் ரூ.218 கோடி சொத்துகள் பறிமுதல்

11,400 கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடியில் தலைமறைவாக பதுங்கியுள்ள மெஹுல் சோக்சியின் 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்தது. #PNBfraud #EDattaches #EDattaches #Choksiassets #MehulChoksi
தலைமறைவு குற்றவாளி மெகுல் சோக்சியின் ரூ.218 கோடி சொத்துகள் பறிமுதல்
Published on

புதுடெல்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார்.

இதைதொடர்ந்து, மெஹுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் விடுவிக்க முடியாத கைது வாரன்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தது. முன்னர் லண்டனில் இருந்ததாக நம்பப்பட்ட மெஹுல் சோக்சி அங்கிருந்து தப்பிச்சென்று, கரிபியன் நாடுகளான ஆண்டிகுவா பர்புடாவில் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கருப்புப்பணப் பதுக்கல் தடுப்பு சட்டத்தின்கீழ் மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள மெஹுல் சோக்சியின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு அமலாக்கத்துறை நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் மெஹுல் சோக்சி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

#PNBfraud #EDattaches #EDattaches #Choksiassets #MehulChoksi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com