‘நிறுத்தற்குறி மிக முக்கியம் அதிகாரிகளே’: கிண்டலுக்கு உள்ளான பிரதமர் அலுவலக ட்வீட்

பிரதமர் மோடியின் மாநிலங்களவை பேச்சை மொழி மாற்றம் செய்து பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு ட்வீட் பலத்த கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.#PMO #Twitter
‘நிறுத்தற்குறி மிக முக்கியம் அதிகாரிகளே’: கிண்டலுக்கு உள்ளான பிரதமர் அலுவலக ட்வீட்
Published on

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பிரதமர் மோடி நேற்று மாநிலங்களவையில் பேசினார். அவர் இந்தியில் பேசியதை பிரதமர் அலுவலகத்தின் அதிகார ட்வீட்டர் பக்கம் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பதிவிட்டது.

இந்நிலையில், “ஏழைகளுக்கு தரமான மற்றும் மலிவான சுகாதார வசதிகளை வழங்குவதில் ஒன்றாக இணைவோம்” என பிரதமர் இந்தியில் பேசியதை மொழிபெயர்ப்பு செய்து பதிவிட்ட அதிகாரிகள் நிறுத்தற்குறிகள் ஏதும் வைக்க தவறி விட்டனர். இதனால், அதன் அர்த்தம் “தரம் குறைந்த மற்றும் மலிவான சுகாதார வசதிகளை வழங்குவதில் ஒன்றாக இணைவோம்” என மாறிவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com