உலக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஆரோவில் நகரம் திகழ்கிறது- பிரதமர் மோடி பேச்சு

ஆரோவில் ஒரு சிறிய நகரமாக இருக்கலாம். ஆனால், உலக ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நகரமாக ஆரோவில் திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். #pmmodi #Auroville
உலக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஆரோவில் நகரம் திகழ்கிறது- பிரதமர் மோடி பேச்சு
Published on

புதுச்சேரி:

சர்வதேச நகரமான ஆரோவில் பொன்விழா இன்று கொண்டாடப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

ஆரோவில் பொன்விழா தபால் தலையை வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று மகாண் அரவிந்தர் கனவு கண்டார் அந்த கனவை நனவாக்கும் வகையில் அன்னை இந்த நகரை உருவாக்கினார்.

இது ஒரு சிறிய நகரமாக இருக்கலாம். ஆனால், உலக ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நகரமாக ஆரோவில் திகழ்ந்து வருகிறது.

உலகத்தின் ஆன்மிகத்தையும், பொருளாதாரத்தையும் தேடுபவர்கள்ஒன்று சேரும் இடமாக இந்த நகரம் உருவாகி இருக்கிறது. பல்வேறு மதங்கள், இனங்கள் இருந்தாலும் உலகின் ஒட்டு மொத்த மக்களும் ஒன்றாக வாழ முடியும் என்பதை எடுத்து காட்டுவதாக இந்த நகரம் இருக்கிறது.

ஆரோவில் கல்வி சமூக வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அது பாராட்டும் வகையில் இருக்கிறது.

இவ்வாறு பிரதமர் பேசினார். #tamilnews #pmmodi #Auroville

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com