யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் காவல் 16-ம் தேதி வரை நீட்டிப்பு

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் அமலாக்கத்துறை காவலை வரும் 16ம் தேதி வரை நீட்டித்து மும்பை கோர்ட் உத்தரவிட்டது.
ராணா கபூர்
ராணா கபூர்
Published on

மும்பை:

தனியார் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும்  ரிசர்வ் வங்கி தன்வசப்படுத்தியது.

மேலும், வங்கிக்கணக்கில் இருந்து  வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும். மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.

இதற்கிடையே, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை இயக்குனரகம் கைது செய்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி, மும்பையில் உள்ள விடுமுறை நீதிமன்றத்தில் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். வரும் 11-ம் தேதிவரை அமலாக்கத்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் விசாரணை காவலை வரும் 16-ம் தேதி வரை நீட்டித்து மும்பை கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com