திண்டிவனம் அருகே பாமக பிரமுகர் அடித்து கொலை

திண்டிவனம் அருகே நண்பர்களுடன் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் பாமக பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள தீர்த்தக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 49). மாற்றுத்தினாளியான இவர் பா.ம.க. பிரமுகர். இவர் அந்த பகுதியில் சிக்கன்கடை நடத்தி வந்தார். நேற்று இரவு செங்குட்டுவன் தனது சிக்கன் கடையில் நண்பர் சதீஷ் உள்பட 3 பேருடன் சேர்ந்து மது குடித்தார். 

போதை தலைக்கேறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சதீஷ் உள்பட 3 பேரும் செங்குட்டுவனை கீழே தள்ளினர். அவரை தாக்கி மேஜையை அவர் மீது தள்ளினர். பின்னர் மேஜையால் பலமாக அமுக்கினர். 

இதில் செங்குட்டுவன் மூச்சுதிணறி இறந்தார். செங்குட்டுவனை கொலை செய்ததாக சதீஷ் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com