மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி பதவியேற்பு

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அன்புமணி
அன்புமணி
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5  மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.

இதற்கிடையே, மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் பதவியேற்றனர். அதிமுக சார்பில் சந்திரசேகர் மற்றும் மொகமது ஜான் ஆகியோரும் பதவியேற்று கொண்டனர். தமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், பாராளுமன்றத்த்ன் மாநிலங்களவையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாக இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com