தென்காசியில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தென்காசி தாலுகா அலுவலகம் அருகே நெல்லை புறநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசியில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

தென்காசி:

பஸ் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தென்காசி தாலுகா அலுவலகம் அருகே நெல்லை புறநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சேது அரிகரன், மாநகர் மாவட்ட செயலாளர் அரிகரன், வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத்தலைவர் அய்யம் பெருமாள் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்டத்தலைவர் குலாம், மாவட்ட துணைத்தலைவர் ராயப்பன் மாவட்ட துணைச்செயலாளர் சதீஷ், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் பாபு உட்பட மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com