பாங்காக் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

தாய்லாந்து நாட்டில் நடைபெறும் இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாங்காக் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை தாய்லாந்துவாழ் இந்தியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்
தாய்லாந்து வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி
தாய்லாந்து வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி
Published on

இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது.

இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.

இன்று பிற்பகல் பாங்காக் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பயணத்தின்போது பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.  ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிடுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com