இன்று சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இன்று சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக  இன்று சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். அங்கு தங்கி இருக்கும் அவர், ரியாத்தில் நடை பெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3 வது அமர்வில் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து அவர் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் சந்தித்து பேசுகிறார். சவுதி அரேபியாவின் சில மந்திரிகளையும் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது எரிசக்தி, நிதி உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com