சர்ச்சைக்குரிய கருத்துக்கள் - திரிபுரா முதல் மந்திரிக்கு பிரதமர் மோடி அழைப்பு

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவரும் திரிபுரா முதல்-மந்திரிக்கு பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய கருத்துக்கள் - திரிபுரா முதல் மந்திரிக்கு பிரதமர் மோடி அழைப்பு
Published on

புதுடெல்லி:

திரிபுரா மாநில பா.ஜனதா முதல்-மந்திரியாக பிப்லப் குமார் தேப் கடந்த மாதம் 8-ந்தேதி பதவியேற்றார்.

முதல்-மந்திரியாக பதவி ஏற்றதில் இருந்து அவர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

“மகாபாரத காலத்திலேயே இணையதளம் வசதிகளும், செயற்கைக்கோள் தொடர்புகளும் இருந்தன”, “படித்த இளைஞர்கள் அரசு வேலை கேட்டு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் பீடா கடை வைத்து பிழைக்கலாம்”, “மாடு மேய்க்கும் தொழிலிலும் இளைஞர்கள் ஈடுபட லாம்” என்று அடுத்தடுத்து சர்ச்சையான கருத்துக்களை கூறினார்.

இதேபோல 1997-ல் உலக அழகி பட்டம் வென்ற டயானா ஹைடன் குறித்தும் அவர் கூறிய கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந் தது.

பா.ஜனதாவினர் யாரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என்று பிரதமர் மோடி சமீபத்தில் கண்டிப்புடன் தெரிவித்து இருந்தார்.

ஆனால் முதல்-மந்திரி பிப்லப்குமார் தேப் அதையும் மீறி தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருவதால் அவர் மீது பா.ஜனதா மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இந்த நிலையில் திரிபுரா முதல்-மந்திரிக்கு பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

வருகிற 2-ந்தேதி பிப்லப் குமார்தேப் டெல்லி வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது அவரை இருவரும் கண்டிப்பார்கள் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com