

ஐதராபாத்:
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை நடத்துகிறது. இன்று தொடங்கும் மாநாடு மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
இம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்பை வரவேற்கிறேன். பெண் தொழில் முனைவோரின் பங்களிப்பு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. நான்கில் மூன்று துறைகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள். விளையாட்டுத்துறையிலும் இந்திய பெண்கள் பிரகாசித்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்று இருப்பவர்களில் 50% பேர் பெண்கள். வரலாற்று காலங்களில் பெண்கள் ஆயுர்வேத வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினர். யோகா மற்றும் ஆன்மிக துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துடம் வாய்ந்ததாக உள்ளது. நான்கில் மூன்று துறைகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
விளையாட்டு துறையிலும் இந்திய பெண்கள் பிரகாசித்து வருகின்றனர்.தொழில் முனைவோருக்கு 10 லட்சம் வரை எளிதாக கடன் கிடைக்கும் வகையில் திட்டம் உள்ளது.ஸ்டார்ட் ஆப் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
தெற்கு ஆசியாவிலேயே தொழில் முனைவோரின் மாநாடு முதன்முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. பெண் தொழில் முனைவோர் 7 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. 685 பில்லியன் ரூபாய் அளவுக்கு தினமும் வங்கி பரிமாற்றம் நடைபெறுகிறது.
300 பில்லியன் வங்கி கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைகளை பயன்படுத்தி 4 கோடி டிஜிட்டல் பரிமாற்றங்கள் நடைபெறுகிறது. புதுமைகளை புகுத்துவதில் நாம் முன்னோடி என்பது கடந்த காலங்களில் நிரூபணம் ஆகிஉள்ளது. நம் ஆதார் திட்டம் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் தாவுதளம். தொழில் முனைவோருக்கான சட்டம் எளிதாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.