அருணாசல பிரதேசத்தில் டோர்ஜி காண்டு மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் மோடி

அருணாசல பிரதேசம் தலைநகர் இடாநகரில் முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் பெயரில் உருவாக்கப்பட்ட மாநாட்டு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து உரையாற்றினார். #pmmodi
அருணாசல பிரதேசத்தில் டோர்ஜி காண்டு மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் மோடி
Published on: 

இடாநகர்:

திரிபுரா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று திரிபுரா செல்கிறார்.

முன்னதாக, அருணாசல பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார்.

தலைநகர் இடாநகரில், முன்னாள் முதல் மந்திரி டோர்ஜி காண்டு பெயரில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பின்னர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

மாநில தலைநகரில் அமைக்கப்ப்ட்டுள்ள தலைமை செயலகத்தில் பல்வேறு அரசு துறைகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது வேலைகளை ஒரே இடத்தில் முடிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களுக்கான கவுன்சில் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். ஆனால் அதன்பிறகு வந்த பிரதமர்களுக்கு அந்த கூட்டத்தில் பங்கேற்க நேரம் இல்லை. ஆனால் நான் உங்களுக்காக நான் வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். #pmmodi #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com