டெல்லி சட்டசபை தேர்தலில் வென்ற கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி சட்டசபை தேர்தலில் அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள். டெல்லி மக்களின் விருப்பங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com