உலக அரங்கில் இந்தியாவுக்கான குரலாக இருந்தவர் சுஷ்மா - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இந்தியாவுக்காக தன்னலமின்றி சேவை செய்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என அவரது முதலாண்டு நினைவு தினத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

புதுடெல்லி:

முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரியான சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது முதலாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவுக்காக தன்னலமின்றி சேவை செய்தவர் சுஷ்மா சுவராஜ் என அவரது முதலாண்டு நினைவு தினத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், சுஷ்மாஜியின் அகால மற்றும் துரதிர்ஷ்டவசமான மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தியது. அவர் தன்னலமின்றி இந்தியாவுக்கு சேவை செய்தார். மேலும், உலக அரங்கில் இந்தியாவுக்கான குரலாக அவர் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com