ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லியில் இன்று காலமான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ராம் ஜெத்மலானி உடலுக்கு மோடி அஞ்சலி
ராம் ஜெத்மலானி உடலுக்கு மோடி அஞ்சலி
Published on

உடல்நிலை பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த மத்திய முன்னாள் மந்திரியும் மூத்த கிரிமினல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி(95) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மத்திய மந்திரிகள், மற்றும் பல்வேறு மாநில முதல் மந்திரிகள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ராம் ஜெத்மலானியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை மந்திரியும் பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா உள்ளிட்டோரும் மலர் வளையங்களை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com