இலங்கை அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை- பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயத்தில் அஞ்சலி

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் சந்திப்பு மேற்கொண்ட மோடி, இருதரப்பு உறவுகள், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இலங்கை அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை- பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயத்தில் அஞ்சலி
Published on

கொழும்பு: 

மாலத்தீவு நாட்டில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். பின்னர் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் சந்திப்பு மேற்கொண்ட மோடி, இருதரப்பு உறவுகள், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோரையும் மோடி சந்தித்து பேசினார்.

பின்னர் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயம் சென்ற மோடி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இதையடுத்து இலங்கைவாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், " உலகளவில் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது. அதற்கு வெளிநாட்டுவாழ் இந்தியர்கள்தான் காரணம்" என கூறினார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயம், மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பின்னர் இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com