காணொலி காட்சி மூலம் மொரீ‌ஷியசில் ஆஸ்பத்திரியை திறந்து வைத்த பிரதமர் மோடி

மொரீ‌ஷியசில் ஆஸ்பத்திரியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் மொரி‌ஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகனாத்துடன் இணைந்து திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Published on

புதுடெல்லி:

இந்தியா மொரீ‌ஷியசில் மக்கள் வசதிக்காக மெட்ரோ ரெயில் போக்குவரத்து மற்றும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான ஆஸ்பத்திரி ஆகியவற்றை அந்நாட்டு அரசுடன் இணைந்து அமைத்துள்ளது. இதனை நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் மொரி‌ஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகனாத்துடன் இணைந்து திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மோடி பேசும்போது, ‘‘இந்தியா மொரீ‌ஷியசுடன் இணைந்து மக்கள் நலனுக்காக இவை உள்பட மேலும் சில திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். கடந்த ஆண்டு குழந்தைகளுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கினோம். புதிய சுப்ரீம் கோர்ட்டு கட்டிடம், ஆயிரம் வீடுகள் ஆகியவை விரைவில் தொடங்கப்படும். இந்த நிகழ்ச்சி இரு நாடுகளுக்கு இடையேயான வரலாறு, பாரம்பரியம், ஒத்துழைப்பு பரிமாற்றத்துக்கான புதிய அத்தியாயம்’’ என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com