அந்தமான் நிகோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு- 10ந்தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

அந்தமான் நிகோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை பிரதமர் மோடி வரும் 10-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

சென்னை-போர்ட் பிளேர் மற்றும் 7 தீவுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 300 கி.மீ நீளமுள்ள கடலுக்கடியில் கேபிள் அமைக்கப்பட உள்ளது. இதனை வருகிற 10 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

இந்த இணைப்பு மூலமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இணையாக, வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைதொடர்பு சேவைகளை வழங்க முடியும் என மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com