பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தவர் மோடி - ஜவடேகர்

பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு சுதந்திரம் வழங்கினார் என்று மத்திய மந்திரி ஜவடேகர் கூறியுள்ளார். #PrakashJavadekar
பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தவர் மோடி -  ஜவடேகர்
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரியும், தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர் அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் ராணுவம் அனுமதி கேட்டது.

அதற்கு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அனுமதி வழங்கவில்லை. ஆனால் புல்வாமாவில் தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு சுதந்திரம் வழங்கினார். எனவே இந்திய விமானப் படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அதேபோன்று அணு குண்டு சோதனை நடத்த நீண்டகாலமாக விஞ்ஞானிகள் அனுமதி கோரி வந்தனர். ஆனால் அப்போது இருந்த பிரதமர்கள் அனுமதி அளிக்கவில்லை.

அதன்பின்னர் 1999-ம் ஆண்டு பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய் அணுகுண்டு சோதனைக்கு அனுமதி வழங்கினார். இதுபோன்று பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதுபோன்று பல்கலைக் கழகங்களில் 200 முக்கிய பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகள், ராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். #PrakashJavadekar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com