‘ஓட்டுகளின் அதிகாரம் மகத்தானது’ என பிரதமர் மோடி தேசிய வாக்காளர் தின வாழ்த்து

1950-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளான இன்று (ஜன. 25) தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. #NationalVotersDay
‘ஓட்டுகளின் அதிகாரம் மகத்தானது’ என பிரதமர் மோடி தேசிய வாக்காளர் தின வாழ்த்து
Published on

புதுடெல்லி:

தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது. 1950-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளை குறிக்கும் வகையில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஓட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும் மற்றும் 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் இந்த தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள். அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்தல் அவசியம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

தேசிய வாக்காளர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி கூறியதாவது, “வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கும் பணியில் 18 வயதானவர்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். வாக்குகளின் அதிகாரம் மகத்தானது என்பதை உணரவைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com