ஜெர்மனி பயணத்தை முடித்து ஸ்பெயின் புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு பெர்லின் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட் புறப்பட்டு சென்றார்.
ஜெர்மனி பயணத்தை முடித்து ஸ்பெயின் புறப்பட்டார் பிரதமர் மோடி
Published on

பெர்லின்:

வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

பயணத்தின் முதல் கட்டமாக நேற்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மோடி அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தார். 

விருந்தினர் இல்லத்தில் உள்ள தோட்டத்தில் இருவரும் நடந்து சென்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவருக்கும் இடையே நடைபெற்ற அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், பிரதமர் மோடி ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட் புறப்பட்டார். பெர்லின் நகரில் உள்ள டெகல் விமான நிலையத்தில் இருந்து மோடி புறப்பட்டு சென்றார்.

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கோபால் பக்ளே கூறுகையில், ஜெர்மனி உடனான சந்திப்புகள் பயனுள்ள வகையில் முடிந்ததாக கூறினார்.

முன்னதாக ஜெர்மனி சுற்றுப் பயணத்தி கடைசி நிகழ்வாக அந்நாட்டு அதிபர் பிராங்-வால்டர் ஸ்டீன்மியரை பெர்லின் நகரில் சந்தித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com