விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டவர்... அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

‘தமிழக அமைச்சர் துரைக்கண்ணு மறைந்தது பற்றி கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு. இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com