உ.பி. சாலை விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார்

உத்தரபிரதேச சாலை விபத்தில் 14 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையை பிரதமர் அறிவித்தார்.
உ.பி. சாலை விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் திருமண வீட்டார் சென்ற லாரி விபத்துக்குள்ளானது. எட்டா மாவட்டம், சராய் நீம் பகுதி வழியாக வேகமாக வந்தபோது, ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 28 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது. 

இந்நிலையில், 14 பேரை பலிகொண்ட இந்த சாலை விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்தார். அதேபோல் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்தார். 

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக தாம் இருப்பதாக கூறிய மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைவதாக கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com