ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழா - பிரதமர் மோடி செப்டம்பர் 30-ந் தேதி சென்னை வருகிறார்

பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் வரும் மோடி சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் வழங்க உள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் கோவை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் 2-வது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அடுத்த மாதம் 30-ந் தேதி (செப்டம்பர்) தமிழகம் வருகிறார்.

சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. இதையொட்டி அங்கு பட்டமளிப்பு விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com