டவ் தே புயல் பாதிப்பு: குஜராத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு- பிரதமர் அறிவிப்பு

டவ் தே புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மோடி ஆலோசனை
மோடி ஆலோசனை
Published on

அதிதீவிர புயலாக வலுப்பெற்ற டவ்-தே புயல் திங்கட்கிழமை இரவு குஜராத்தில் கரையைக் கடந்தது. புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்தன. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மரங்களும் மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. நள்ளிரவில் கரையை முழுமையாகக் கடந்த பிறகு, டவ்-தே புயல் வலுவிழந்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். அதன்பின் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், குஜராத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிதியாக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கப்படும் அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com