புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை திறந்து வைத்தார் பிரதமர்

அமைதியான முறையில் போராடியவர்கள் மீது பிரிட்டிஷ் படைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 1000க்கும் மேற்பட்டோரை கொன்ற நிகழ்வுகளை கண்முன் கொண்டு வரும் வகையில், ஒலி மற்றும் ஒளி காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
காணொளி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி
காணொளி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி
Published on

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில், புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் இணைந்து, நினைவிடத்தை திறந்து வைத்தார். அப்போது, ஜாலியன்வாலாபாக்கில் கொல்லப்பட்ட தியாகிகளின் நினைவாக மலர்வளையம் வைத்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவிட வளாகத்தில், நான்கு அருங்காட்சியக காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது பிரிட்டிஷ் படைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 1000க்கும் மேற்பட்டோரை கொன்ற துயரமான நிகழ்வுகளை கண்முன் கொண்டு வரும் வகையில், ஒலி மற்றும் ஒளி காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த காலகட்டத்தில் பஞ்சாபில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளையும் நவீன தொழில்நுட்பத்துடன் காட்சிப்படுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com