சீனாவில் சிக்கிய இந்தியர்களை மீட்டதற்கு பாராட்டுகள் - மீட்பு ஊழியர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவிய சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா, சுகாதார துறை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவின் கேரளாவில் 3 பேருக்கும், கொல்கத்தா வந்த 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவிய சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com