குரு பூர்ணிமா: பிரதமர் மோடி வாழ்த்து

நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய குருவிற்கு மரியாதை செலுத்தும் குரு பூர்ணிமாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் சென்று மழைக்காலம் தொடங்கும் காலத்தில் ஆனி மாதம் வரும் பவுர்ணமி ‘குரு பூர்ணிமா’வாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தங்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் குருவாக திகழ்ந்திருக்கும் நபர்களுக்கு மரியாதை செலுத்தும் சிறப்பு நாளாகவும் விளங்குகிறது.

அதன்படி இன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘குரு பூர்ணிமாவுக்கு ஏராளமான வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இன்றைய தினம் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய குருவிற்கு மரியாதை செலுத்தும் சிறப்பான நாளாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com