

அதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர், எச்1பி விசா நடைமுறை மாற்றம் குறித்த கோப்பில் கையெழுத்திட்டார். அமெரிக்காவை போல் பல நாடுகளில் வெளிநாட்டினர் வேலைபார்த்து வருகின்றனர். இதனால் உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கும் இதுபோன்ற ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் ‘457’ என்ற விசா நடைமுறையை ஒழிப்பதாக அறிவித்துள்ளார். இந்த விசா மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் ஆஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் வேலைப் பார்க்க முடியும்.
தற்போது எடுத்திருக்கும் முடிவினால் ஏராளமான இந்திய ஊழியர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, இதுகுறித்த கவலையை இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘ஆஸ்திரேலியா 475 விசா நடைமுறையில் கொண்டு வந்துள்ள மாற்றம் எங்களுக்கு பெரிய கவலையளிக்கிறது என்று பிரதமர் மோடி, மால்கம் டர்ன்புல்லிடம் டெலிபோனில் தெரிவித்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து இருநாட்டு அதிகாரிகளும் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்த ஒப்புக்கொண்டனர்.