தென் கொரியா அதிபர் மூன் ஜயே-இன்னுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

தென் கொரிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள மூன் ஐயே-இன்னுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென் கொரியா அதிபர் மூன் ஜயே-இன்னுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
Published on

தென்கொரிய அதிபராக இருந்த பார்க் ஜியூன் - ஹை ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் மூன் ஜயே-இன்னும், கன்சர் வேடிவ் கட்சி வேட்பாளராக ஹாங் ஜோன்-பையோவும், மிதவாதியான அகின் சியோல்- சூ ஆகியோர் போட்டியிட்டனர்.

இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
துவக்கத்தில் இருந்தே ஜனநாயக கட்சி வேட்பாளர் மூன் ஜயே-இன் முன்னணியில் இருந்தார். முடிவில் அவர் அபார வெற்றி பெற்றார். அவர் 41.1 சதவீத வாக்குகள் பெற்றார்.

மூன் ஜயே-இன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சியோல் நகரமே விழாக்கோலம் பூண்டது. அவரது ஆதரவாளர்களும், கட்சி தொண்டர்களும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆரவாரம் செய்தனர். தேர்தலில் வென்றுள்ள மூன் ஜயே-இன் தென்கொரியாவின் 19-வது அதிபராவார்.

வடகொரியா ஆதரவாளரான இவர் சரியான சூழ்நிலை அமையும் போது அங்கு செல்ல விரும்புவதாக கூறினார். புதிய அதிபராகும் மூன் ஜயே- இன்னுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மூன் ஜயே-இன்னை விரைவில் நேரில் சந்தித்து, அவருடன் பணியாற்ற விரும்புவதாக இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.   

ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆங்கிலம் மற்றும் கொரிய மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com