தேனி அருகே திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவி கடத்தல்

தேனி அருகே திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி அருகே திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவி கடத்தல்
Published on

தேனி:

தேனி அருகே உள்ள பரமதேவன்பட்டி ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது26). இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்தார். அந்த மாணவி ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

காலாண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஈஸ்வரன் நைசாக அவரிடம் பேசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டார்.

இது குறித்து மாணவியின் தந்தை உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும் அவரை கடத்திய வாலிபரையும் தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி அருகில் உள்ள சில்வார்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் சின்னபிச்சை. இவரது மகள் ஹேமலதா (19). இவர் சம்பத்தன்று கடைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com