ஆழியாறு அருகே பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஆழியாறு அருகே பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ரோகினி (வயது18) பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரோகினி திடீரென அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட ரோகினியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com