திருவள்ளூரில் பிளஸ்-2 மாணவி மாயம்

திருவள்ளூரில் பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் நர்மதா (17). திருவள்ளூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

கடந்த 6-ந் தேதி பள்ளிக்கு சென்ற நர்மதா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவியின் தந்தை குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com