பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்: கைதான பேக்கரி கடை ஊழியர் சிறையில் அடைப்பு

மாரண்டஅள்ளி அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பேக்கரி கடை ஊழியர் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்: கைதான பேக்கரி கடை ஊழியர் சிறையில் அடைப்பு
Published on

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ரெயில்வே கேட் குடோன் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் சரவணக்குமார் (வயது19). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை சரவணகுமார் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து தர்மபுரி குழந்தைகள் நல மையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. 

சரவணக்குமார் மீது பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com