செய்யாறு அருகே பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

செய்யாறு அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு அருகே பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது
Published on

செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள ஆராத்திரி வேலூரை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மூர்த்தி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அறிந்த மாணவின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரேகாமதி மற்றும் போலீசார் மூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மூர்த்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com