கல்லாவி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர்: போலீசார் விசாரணை

கல்லாவி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தல்
கடத்தல்
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகேயுள்ள கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். 

இவர் கடந்த 30-ந்தேதி அன்று வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கல்லாவி போலீசில் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் முரளி (21) என்பவர் எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சிறுமியை கடத்திய முரளி மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com