திருமங்கலம் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்

திருமங்கலம் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
சாலையில்  நாற்று நடும் போராட்டம் நடந்தது.
சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள குதிரைசாரி குளம் மற்றும் பழனியாபுரம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதி திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் இருந்து தெற்கு புறமாக உள்ளது. இங்கு வசிப்பவர்கள் திருமங்கலம் நகர் பகுதிக்கு வர வேண்டு மென்றால் நான்கு வழிச்சாலையை கடந்துதான் வர வேண்டும்.

ஆனால் இந்த பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுத்த பின்பு இதுவரை அதனை சீரமைக்க அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை.

இதுதொடர்பாக மனு கொடுத்தால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டங்கள் நடத்தியும் பணிகள் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் தங்களுடைய பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டு சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.

இதில் உடனடியாக அமைச்சர் தலையிட்டு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com