ஆலை நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள ஆலை நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி:

சுதேசி, பாரதி, ரோடியர் மில்களை முழுமையாக இயக்கி முழு உற்பத்தி எடுத்து தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுவை பஞ்சாலை அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள ஆலை நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி செயல் தலைவர் அபிஷேகம் தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், முனியாண்டி, கோதண்டபாணி, கல்யாணம், ஞானசுந்தரம், பரமேஸ்வரன், கோவிந்தராஜன், பழனிச்சாமி, காளிதாஸ், கதிரவன், பாபு, ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் சுதேசி, பாரதி மில்களில் லேஆப்பை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணிமுடித்த தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். புதுவை ஆலைகளில் சாயம் போடும் பணிகளை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுதேசி, பாரதி மற்றும் ரோடியர் மில்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com