

புவனேஸ்வர்:
இந்திய பாதுகாப்புத்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் போராயுதங்களின் உருவாக்கத்துக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ’பினாக்கா’ வான்வழி தாக்குதல் தடுப்பு ஏவுகணை ஒடிசாவில் உள்ள பலசோர் கடல் பகுதியில் மீண்டும் இன்று பரிசோதிக்கப்பட்டது.
90 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்ட மாதிரி இலக்கை நமது ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.