சாதி வன்கொடுமையை எதிர்த்து மருத்துவர் சமூக நல சங்கம் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த சாதி வன்கொடுமையை எதிர்த்து மருத்துவர் சமூக நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
Published on

ராமநாதபுரம்:

தர்மபுரி மாவட்டத்தில் பிக்கம்பட்டி கிராமத்தில் மருத்துவ சமூகத்தை சேர்ந்த அஜித்குமார், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் காதல் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அஜித்குமாரின் உறவினர்களை காரில் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூகநலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட, நகர் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்றது.

போராட்டத்திற்கு நகர் தலைவர் உமாநாத் தலைமை வகித்தார். செயலாளர் பழனி, பொருளாளர் முருகபாண்டி முன்னிலை வகித்தனர்.

மாநிலத் தலைவர் நடேசனார், மாநில பொதுச்செயலாளர் ராஜன், மாநில பொருளாளர் குமார் உட்பட பலர் சம்பவத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர். சாதிய வன்முறை சம்பவத்தை கண்டித்து பேசினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com