திருமண கொண்டாட்டம் - ஆர்வ கோளாறில் புகைப்படக்காரர் பலி

மத்தியப்பிரதேசத்தில் திருமண கேளிக்கையின்போது சுட்டதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து புகைப்படக்காரர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமண கொண்டாட்டம் - ஆர்வ கோளாறில் புகைப்படக்காரர் பலி
Published on

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் போபாலில் உள்ள கோவிந்த்புராவில் ண்டராக் கம்யூனிட்டி ஹாலில் நேற்று திருமண நிகழ்ச்சி 

நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமணத்துக்கு வந்த புகைப்படக்காரர் அனைத்து சம்பவங்களையும் கேமராவில் படம் பிடித்தார்.

அந்த சமயத்தில் மண்டபத்தின் வெளியே ஒரு குழுவினர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தனர். அதையும் படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புகைப்படக்காரர் வெளியே வந்தார்.

அப்போது, துப்பாக்கியில் இருந்த குண்டு ஒன்று புகைப்படக்காரர் மீது பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து புகைப்படக்காரர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com