

வாஷிங்டன்:
அமெரிக்காவின் பிலா டெல்பியாவில் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் இங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் வானத்தில் கரும்புகை பரவியது.
தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தின் போது ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.