வேலை கிடைக்காததால் விரக்தி - ஆராய்ச்சி படிப்பு மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் சரியாக அமையாததால் விரக்தியடைந்த ஆராய்ச்சி படிப்பு மாணவர் 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலை கிடைக்காததால் விரக்தி - ஆராய்ச்சி படிப்பு மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
Published on

ஐதராபாத்:

கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த விசால் டந்தான் (43) என்ற மாணவர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பொதுக்கல்வியில் ஆராய்ச்சி பட்டம் பயின்று வந்துள்ளார். சமீப காலமாக அவருக்கு சரியான வேலை வாய்ப்புகள் அமையாததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை நல்லகுண்டா பகுதியில் உள்ள தனது வீட்டில் தாயார் இல்லாத போது, 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த விசால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மாடியிலிருந்து குதிக்கும் முன்னதாக, தற்கொலை முடிவு குறித்து தனது சகோதரிக்கு இ-மெயில் மூலம் விசால் தகவல் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com