

புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எப்) வட்டி விகிதம் 8.65 சதவிகிதத்தில் இருந்து 7.8 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்த சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்து, பின்னர் எதிர்காலத்தில் அதை மொத்தமாக பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. சேமிக்கப்படும் இந்த தொகைக்காக வட்டியும் இறுதியில் அளிக்கப்படுகிறது.
இந்த நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவிகிதம் இருந்த நிலையில், தற்போது வட்டி விகிதம் 7.80 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை இந்த விகிதம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.