பேட்டை அருகே இருதரப்பினர் மோதல்: 6 பேர் கைது

பேட்டை அருகே இருதரப்பினர் மோதலில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருதரப்பினர் மோதல்
இருதரப்பினர் மோதல்
Published on

பேட்டை:

பேட்டை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆபிகாம் (வயது 25). பழ வியாபாரி. இவர் வியாபாரம் செய்தபோது பேரம் பேசும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டதில் 3 பேரால் தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் சம்பவத்தன்று போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் அசோகர் தெருவை சேர்ந்த சிலர் நாராயணசாமி கோவில் தெருவில் வந்து தகராறு செய்தனர். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இசக்கி செல்வம் (30), முத்துலட்சுமி (30), மற்றொரு முத்துலட்சுமி (28) ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் இருதரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முகிலன்(24), அஜித்குமார் (24), ரமேஷ் (23) மற்றும் பிரபாகரன்(28), மற்றொரு பிரபாகரன் (27), கார்த்திக் ராஜாராம்(36) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் 30 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com