

வாழப்பாடி:
பெத்தநாயக்கன் பாளையம் உப கோட்டம், புத்திரகவுண்டம் பாளையம் துணை மின்நிலையததில் 12-ந்தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
அன்று காலை 9 மணி முதல் பகல் 3 மணிவரை புத்திரகவுண்டம்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரக் கவுண்டனூர், காந்திநகர், தளவாய்பட்டி, தென்ன பிள்ளையூர், ஒட்டப்பட்டி, ஓலப்பாடி, உமையாள்புரம், ஆரியபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னம சமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, வைத்திய கவுண்டன் புதூர், பெரிய கிரஷ்ணாபுரம், கொத்தாம் பாடி, கல்பகனூர், ராசிநகர் மற்றும் சிற்றூர்களில் மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் குண சேகரன் தெரிவித்துள்ளார்.