பேரூர் அருகே இளம்பெண் தற்கொலை

பேரூர் அருகே திருமணமான 1 வருடத்தில் தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூர் அருகே இளம்பெண் தற்கொலை
Published on

கோவை:

கோவை பேரூர் அருகே உள்ள வழுக்குப்பாறையை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கவுசல்யா (வயது 18). இவர்களுக்கு கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

நேற்று காலை வீட்டில் இருந்த கார்த்திகேயனிடம், கவுசல்யா தனது தாய் வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அவர் நாளைக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் இருந்து கவுசல்யாவை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பேரூர் அனைத்து மகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1 ஆண்டில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com