பெருங்குடியில் தொழிலாளி கொலை: 2 வாலிபர்கள் கைது

பெருங்குடியில் தொழிலாளி கொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருங்குடியில் தொழிலாளி கொலை: 2 வாலிபர்கள் கைது
Published on

அவனியாபுரம்:

பெருங்குடி வாசுகி நகரில் 2 தினங்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி சுரேஷ் (59) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இவர் இங்கு துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் பாலமுருகன் என்பவருக்கும், முனிஸ் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அதை சுரேஷ் தடுத்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த முனிஸ் தரப்பினர் சுரேஷை வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து பெருங்குடி இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில் பெருங்குடி கணேசபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (22), சிவா என்ற சிவக்குமார் (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான முனிசை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com