தவுட்டுபாளையம் அருகே வாலிபர் தற்கொலை

தவுட்டுபாளையம் அருகே உடல் நிலை சரியில்லாமல் இருந்த வாலிபர் மண்எண்ணையை தன் உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
தவுட்டுபாளையம் அருகே வாலிபர் தற்கொலை
Published on

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே குன்னிக்காட்டுரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 31). இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

அலறல் சத்தம் கேட்டதால்  உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு  வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.      

இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com